தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் என நினைத்து ரசாயனத்தை குடித்த நபர் உயிரிழப்பு! - kancheepuram district news

காஞ்சிபுரம் : தண்ணீர் என்று நினைத்து ’ஆளா’ என்ற ரசாயனத்தை ஊற்றி மது அருந்திய காவலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The person who drank the chemical thinking it was water
The person who drank the chemical thinking it was water

By

Published : Apr 12, 2021, 5:08 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகிலுள்ள காஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் காளி (63). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் பணி முடித்துவிட்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய காளி ஏற்கனவே அதிக மது போதையில் இருந்துள்ளார். மேலும் வீட்டில் மது அருந்துவதற்காக தண்ணீர் என்று நினைத்து துணி துவைக்க பயன்படும் ஆளா (ALA) என்னும் ரசாயனத்தை மதுவுடன் சேர்த்து குடித்தார். இதில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சில மணி நேரத்தில் மயங்கியதாக தெரிகிறது.

இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளி இன்று (ஏப்.12) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details