காஞ்சிபுரம்:அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி மாதங்களில் மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், தீ மிதித்திருவிழா எனப்பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று, அம்மாதங்களே சிறப்புறக்கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஆர்பாக்கம் கிராமத்திலுள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதத்தை ஒட்டி 30ஆவது ஆண்டாக ஆடி மாத தீ மிதித்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் மிக விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று (ஆக. 07) ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு தொடங்கி மிக கோலாகலமாக நடந்தது.