காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தில், சயன கோலம் மற்றும் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தற்போது சயன கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என்று இணை ஆணையர் செந்தில்வேலன், கோயில் நிர்வாக அலுவலர் தியாகராஜன், பட்டாச்சாரியார் கலந்தாலோசித்து முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 1 முதல் புதிய அவதாரம் எடுக்கும் அத்திவரதர்! - அத்திவரதர்
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆகஸ்ட் 1 முதல் 17 வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ATHTHI VARATHAR
இதற்கிடையே இன்று மதியம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திவரதரை தரிசக்க உள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Last Updated : Jul 23, 2019, 2:31 PM IST