தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்மிக மனம் வீசுகின்ற அரசாக திமுக உள்ளது - அமைச்சர் சேகர் பாபு - DMK is a spiritually minded government

தமிழ்நாட்டில் ஆன்மிக மனம் வீசுகின்ற அரசாக திமுக அரசு விளங்கி வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சேகர் பாபு
சேகர் பாபு

By

Published : May 9, 2022, 11:06 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்ட தாழையம்பட்டு கிராமத்தில் விஷ்ணு துர்க்கை, பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் நேற்று (மே 8) மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆன்மிக அரசு:முன்னதாக வேதமந்திரங்கள் ஓதி யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டு,பூர்ணாகுதி நடைபெற்று யாக கலசங்கள் கோவிலின் உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நீர் ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாட்டில் ஆன்மிக மனம் வீசுகின்ற அரசாக திமுக அரசு விளங்கி வருவதாக தெரிவித்தார்.

ஆன்மிக மனம் வீசுகின்ற அரசாக திமுக உள்ளது - அமைச்சர் சேகர் பாபு

ஆன்மிக புரட்சி :பழமை வாய்ந்த 80 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் , தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் கட்சியாக திமுக உள்ளதாக கூறினார். மேலும் வரும் ஆண்டுகளில் பட்டினபிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு மாற்றாக வேறு ஏற்பாடுகளை செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆதீனத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இதையும் படிங்க: பட்டினப்பிரவேச விவகாரம்: அரசு நல்ல முடிவினை எடுத்துள்ளது - திருவாவடுதுறை ஆதீனம் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details