தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என் ஆறு மாத சம்பளம் எங்கே?' - மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு - contract worker tried to set fire

காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்த பணியாளருக்கு 6 மாதக்காலம் சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு அவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தனது 6 மாத சம்பள பாக்கியை உடனே வழங்கக் கோரி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தனது 6 மாத சம்பள பாக்கியை உடனே வழங்கக் கோரி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

By

Published : Jul 2, 2022, 10:22 AM IST

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளராக பணியாற்றியுள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் நேற்று முன்தினம் (ஜூன் 30) பணியிட மாறுதல் காரணமாக, ஒப்பந்த பணியாளர்களையும் பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆறு மாதம் சம்பளம் பாக்கி உள்ளதாகவும், அந்த சம்பளத்தை உடனே வழங்கக்கோரி, மண்ணெண்ணெய் கேனுடன் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் பெருமாள் திடீரென தீ குளிக்க முயன்றார். இதை பார்த்த அருகில் இருந்த செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தி பெருமாளை காப்பாற்றினர்.

தனது 6 மாத சம்பள பாக்கியை உடனே வழங்கக் கோரி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

இதனை தொடர்து, 6 மாதம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த பிரச்சனை நடைபெற்ற போது மேயர், ஆணையர் ஆகியோருடன் நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா ஐ.ஏ.எஸ் ஆய்வு மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'இனிமேல் லஞ்சம் கேட்பீங்க' - பட்டா மாற்ற ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details