காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் நினைவாக 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வரை அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால் இதன் நினைவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு அத்திமரக்கன்றுகள் நடும் விழா! - athivarathar fest
காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே சிறுதாவூர் ஊராட்சியில் அத்திமரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.
இதையடுத்து, திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் அத்திவரதர் விழாவை ஒட்டி, 13 ஊராட்சி ஒன்றியங்களில் அத்திமரம் நடும் விழா இன்று நடைபெற்றது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இதில் திருப்போரூர் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளில் 4,000 மரக்கன்றுகள் நடப்பட்டது. சிறுதாவூர் ஊராட்சியில் மட்டும் 600 மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வெங்கட்ராகவன், பிரகாஷ்பாபு அத்திமரக்கன்றுகளை முதலில் நடவு செய்தனர். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.