தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 29, 2021, 6:24 AM IST

ETV Bharat / state

கடித்த பாம்பை கையோடு கொண்டு வந்து வியப்பை ஏற்படுத்திய சிறுவன்

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கையோடு கொண்டு வந்த 7 வயது சிறுவனின் துணிச்சல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாம்பை கையோடு கொண்டுவந்து வியப்பை ஏற்படுத்திய சிறுவன்
பாம்பை கையோடு கொண்டுவந்து வியப்பை ஏற்படுத்திய சிறுவன்

காஞ்சிபுரம்: ஏகானாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தா்ஷித் (7). இவர் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவன் தர்ஷித் கடந்த 16ஆம் தேதி, வெள்ளகேட்டு பகுதியிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள வயல் வெளியில் சிறுவன் தர்ஷித் விளையாடி கொண்டிருந்தபோது, கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு சிறுவனை கடித்துள்ளது.

பாம்பைக் கொன்று கையோடு கொண்டு சென்ற சிறுவன்

இருப்பினும் சிறுவன் தர்ஷித் பயப்படாமல் பாம்பைக் கொன்று, தனது பெற்றோா் உதவியுடன் அதனை பையில் எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளான்.

சிறுவன் தர்ஷித்தை கடித்த கண்ணாடி விரியன் பாம்பு

அப்போது சிறுவனின் உடம்பில், பாம்புக் கடிக்கான எவ்வித அறிகுறிகளும் தெரியவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுவன் தா்ஷித் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். வீட்டிற்கு சென்ற மறுநாள் சிறுவன் தர்ஷித்தின் கால் வீக்கமடைந்து, உடல் நலம் சற்று மோசமடைந்துள்ளது.

இதனையடுத்து சிறுவன் தர்ஷித், மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தலைமை மருத்துவா் பூவழகி தலைமையிலான குழுவினா், உயா் சிகிச்சை அளித்து சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.

பாம்பிடம் கடிபட்ட சிறுவன் தா்ஷித்

உடனடி அனுமதியால், உயிரிழப்பு தவிர்ப்பு

இதுகுறித்து குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணா் டாக்டா் சீனிவாசன் பேசுகையில், “சிகிச்சையின்போது பாம்பை எதற்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்தாய் என கேட்டபோது, நான் பாம்பை கையில் கொண்டு வந்தால்தானே என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும் என சிறுவன் தர்ஷித் பதில் அளித்தது வியப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுகின்றனா். பாம்பு கடித்த மூன்று மணி நேரத்திற்குள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றால் உயிரிழப்புகளை தவிா்க்கலாம்” எனறும் டாக்டர் சீனிவாசன் கூறினார்.

இதையும் படிங்க:தவறி விழுந்து 15 மாத குழந்தை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details