காஞ்சிபுரம் அருகேவுள்ள உத்தரமேரூர் குழம்பேஸ்வரர் கோவில் தெருவில் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அதற்காக, பள்ளம் தோண்டப்பட்டபோது பூமியிலிருந்து பழங்கால தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்தச் சிலைக்கு நீர் ஊற்றி சுத்தம் செய்து, பூஜை செய்து வழிபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து அச்சிலையைப் பார்வையிட்டனர். மேலும், இந்தச் சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி சிலை என்பதையும் உறுதிசெய்தனர்.
இது குறித்து அவ்வரலாற்று மையத்தின் தலைவர் கொற்றவை, “இச்சிலையானது 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உடையது. வெண் கொற்றக்குடையின் கீழ் கரண்ட மகுடத்துடன் காதில் பத்ர குண்டலமும், மார்பில் அணிகலன்களும் அணிந்தும், இடுப்பில் ஆடை அணிந்து அமர்ந்த நிலையிலும் உள்ளது.