தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு! - Statue invention

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சர்வ தீர்த்தக் குளத்திலிருந்து ஒரு அடி கொண்ட ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

statue-invention

By

Published : Jun 20, 2019, 8:29 AM IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சர்வ தீர்த்தக் குளம், வெயிலின் தாக்கம் காரணமாக சில வாரங்களாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி சிறுவர்கள் அந்தக் குளத்தை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்திவந்தனர்.

ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

நேற்று மாலை சிறுவர்கள் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை அங்கிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குவந்த காவல் துறையினரிடம் பொதுமக்கள் சிலையை ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details