காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை 1900ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த கலவல கண்ணன் அறக்கட்டளை வாங்கி அதில் மேல்நிலைப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தது. 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெறப்பட்ட சென்னை கீழ்ப்பாக்கம் முதல் பூந்தமல்லி சாலையில் அமைந்திருந்த இவ்விடத்தை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட காலம் முடிந்தவுடன் அறக்கட்டளை நிர்வாகம் ஒப்படைக்கவில்லை.
200 கோடி ரூபாய் மதிப்புடைய கோயில் நிலம் மீட்பு! - temple land recovered
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ. 200 கோடி மதிப்புடைய நிலம் அரசு அலுவலர்களால் மீட்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு முடிந்துவிட்டதால் சம்பந்தப்பட்ட இடத்தை மீட்குமாறு இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் காஞ்சிபுரத்தில் உள்ள அறநிலையத்துறை துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டார். அரசு உத்தரவை தொடர்ந்து காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி தலைமையில் ஏகாம்பரநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் நாகராஜன், கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று, இடத்தை பூட்டி சீல் வைத்து கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்
இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயில் செயல் அலுவலரான தியாகராஜன் கூறுகையில், 99 ஆண்டுகள் கலவல கண்ணன் அறக்கட்டளை கோயில் இடத்தை குத்தகைக்கு வாங்கி இருந்தது .குறிப்பிட்ட காலம் முடிந்தும் அறக்கட்டளை நிர்வாகம் இடத்தை ஒப்படைக்காமல் அலட்சியமாக இருந்தது. அதில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இடத்தை காலி செய்யுமாறு அறநிலையத்துறை செயலாளரின் அரசு உத்தரவின்படி அந்த இடம் மீட்கப்பட்டு, கோயிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 200 கோடி ஆகும் என்றார்.