காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 76 சென்ட் நிலம் நகரின் மையப்பகுதியான ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது.
இந்த நிலம் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றங்களில் கோயில் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.