தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளைடித்த இளைஞர்கள்! - சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் நூக்காலம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

theft

By

Published : May 27, 2019, 12:18 PM IST

கடந்த மே 25ஆம் தேதி மாலை உத்திரமேரூர் நூக்காலம்மன் கோயிலை பூட்டிவிட்டு சென்ற பூசாரி, மே 26ஆம் தேதி காலை கோயிலை திறந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே உத்திரமேரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தினார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை சேகரித்துச் சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் உண்டியலை உடைத்து ஏழு ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கொள்ளையடித்துச் சென்ற இளைஞர்கள் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்திரமேரூரில் கோயில் உண்டியலை உடைத்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

கோவில் உண்டியல் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details