உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் 43ஆவது நாளான இன்று அத்திவரதர் வைபவத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதுபோல நடிகையும் ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுமான ரோஜாவும் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அத்திவரதரை தரிசித்த தெலங்கானா முதலமைச்சர்! - telungana cm chandrasekar rav
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் அத்திவரதரை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார்.
அத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதலமைச்சர்
அவர்களுக்கு பட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.