தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! - தமிழ் குற்ற செய்திகள்

காஞ்சிபுரம்: பனப்பாக்கம் அருகே தாயுடன் வசித்து வந்த திருமணமான இளம்பெண் குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Teen commits suicide by hanging due to family dispute - Police investigation
Teen commits suicide by hanging due to family dispute - Police investigation

By

Published : Jan 13, 2021, 1:36 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் நாவலூர் குடியிருப்பில் வசித்து வருபவர் அரங்க லட்சுமி. இவரது மூத்த மகளான பிரியதர்ஷினி (26). ஆறு வருடங்களுக்கு முன்பு மரக்காணம் பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததால், பிரியதர்ஷினி தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரியதர்ஷினி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுவன் மோதி ஒருவர் உயிரிழப்பு: வாகனம் ஓட்ட அனுமதித்த பெரியப்பா கைது!

ABOUT THE AUTHOR

...view details