தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2022, 1:53 PM IST

ETV Bharat / state

இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்றுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாட்டில் 2 கோடியே 50 லட்சம் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராமச்சந்திரன்
அமைச்சர் ராமச்சந்திரன்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு வனத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்களில் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், "கடந்த ஆட்சி காலத்தில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் போய் இருக்கலாம், ஆனால் தற்போதுள்ள மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன்

உரிய இழப்பீடு வரவில்லை என்றால் என்னை நேரடியாக தொடர்புக் கொண்டு (9443566666) இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனறு தெரிவித்தார்.

2.50 கோடி மரங்கள் நடப்படும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், "வனப்பரப்பை 33 விழுக்காடாக அதிகரிக்கும் முதலமைச்சரின் கனவை நினைவாக்கும் வகையில் வனத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு விவசாயிகளின் ஆதரவும் தேவை. இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறையை மாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

2022-23 ஆண்டுகளில் 2 கோடியே 50 லட்சம் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்து வரும் காலங்களில் ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் மரங்கள் என திட்டமிடப்பட்டு 2030 ஆண்டுக்குள் 261 கோடி மரங்கள் நடப்படும். இதன் மூலம் தற்போது உள்ள வனப் பரப்பளவான 24 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடாக மாற்றப்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒகேனக்கல் வனப்பகுதியில் சமூகவிரோதிகள் சென்று யானையை சுட்டு கொன்றுள்ளனர். அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. அதற்கு உதாரணமாக நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பழைய குற்றால அருவியில் இரவு நேரங்களிலும் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும்- வியாபாரிகள் கோரிக்கை.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details