காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் மருத்துவ சேவைகள் பெற இஎஸ்ஐசி மருத்துவமனை அமைக்க கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் இஎஸ்ஐசி மருத்துவமனை கட்ட மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு
துறை அமைச்சகம் முடிவு செய்து , நிலம் ஒதுக்கி தர தமிழ்நாடு அரசிடம் கேட்டு கொண்டதன் அடிப்படையில்
ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகல் கிராமத்தில் 5.12 ஏக்கர் நிலம் ஓதுக்கப்பட்டது.
இந்நிலையில் ரூ.155 கோடியில் புதியதாக 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஜசி மருத்துவமனை அமைப்பதற்கு நேற்று (மே 22) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெளி அடிக்கல் நாட்டினார்.