காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில், கோயில்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நாள்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு கோயில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கியது. இதனால் முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.