தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவோடுக்கு பதில் அலுமினிய தட்டு.. பாஜக போராட்டத்தில் ருசிகரம்! - திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி

திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதிக்கு திருவோடு அனுப்ப முடிவு செய்த பாஜகவினர் அது கிடைக்காததால் அலுமினிய தட்டு அனுப்பி போராட்டம் நடத்தினர்.

திருவோடுக்கு பதில் அலுமினிய தட்டு.. பாஜக போராட்டத்தில் ருசிகரம்!
திருவோடுக்கு பதில் அலுமினிய தட்டு.. பாஜக போராட்டத்தில் ருசிகரம்!

By

Published : Nov 29, 2022, 8:50 PM IST

காஞ்சிபுரம்:காஞ்சியின் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் கையில் அலுமினிய தட்டுடன் திரண்டிருந்தனர். அவர்களிடம் இது குறித்து விசாரித்த போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு திருவோடு அனுப்பும் போராட்டம் அறிவித்திருந்ததாகவும், திருவோடு கிடைக்காததால் அலுமினிய தட்டு அனுப்பப்போவதாகவும் கூறினர்.

பாஜக நிர்வாகிகள் செந்தில்குமார்,அதிசயம் குமார் உள்ளிட்டோரின் பெயரில் ஆர்.எஸ்.பாரதி வீட்டு முகவரிக்கு அலுமினிய தட்டுடன், நாணயங்களும் அனுப்பிவைக்கப்பட்டன. சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ். பாரதி, தமிழக அரசின் வரிப்பணத்தில் செலவுகளைப் பெறும ஆளுநர் திராவிடத்திற்கு எதிராக பேசுகிறார் என விமர்சித்தார்.

ஐ.பி.எஸ்.படித்து அரசியலுக்கு வரும் எல்லோரும் மென்டலாகத்தான் இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார். இதனையடுத்து வேறொரு நிகழ்வில் பேசிய அண்ணாமலை, அண்ணா அறிவாலயத்தில் சில நபர்கள் தலைமுறை தலைமுறையாக பிச்சை எடுத்து வருகின்றனர் என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஆர்.எஸ். பாரதிக்கு திருவோடு அனுப்பும் போராட்டத்தை பாஜகவினர் அறிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details