காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு ஊரகத் தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அவர்களின் தாயார் ராஜாமணி அம்மாள் (வயது 83) அவர்கள் நேற்று(பிப்ரவரி 10) இரவு 10.00 மணியளவில் காலமானார்.
மறைந்த ராஜாமணி அம்மாளுக்கு தா.மோ.அன்பரசன் - தா.மோ.எழிலரசன் ஆகிய இரு மகன்களும், கனிமொழி, பவானி, கண்மணி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.