தமிழ்நாடு

tamil nadu

அடுக்குமாடிக் குடியிருப்பில் சந்தேகமான முறையில் தொழிலாளி உயிரிழப்பு: காவல்துறை விசாரணை

By

Published : Mar 13, 2021, 7:38 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் சந்தேகமான முறையில் உயிரிழந்த தொழிலாளி குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

suspicious-worker-death-police-investigation
suspicious-worker-death-police-investigation

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் (20) என்பவர், பிளம்பராக வேலைசெய்து வந்துள்ளார்.

நேற்று முன் தினம்(மார்ச் 11) இரவு அசோகனும், அவருடன் பணிபுரிந்து வந்த சுந்தரமூர்த்தி (39) என்பவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில் உறங்கி உள்ளனர். இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது அசோகன் திடீரென காணாமல் போனதை அறிந்த சுந்தரமூர்த்தி பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது அடுக்குமாடிக் குடியிருப்பில் லிப்ட் அமைப்பதற்காக கட்டப்பட்டுள்ள குழியில் வந்து பார்த்தபோது தலை, உடலில் காயங்களுடன் அசோகன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் காவல் துறையினர், உயிரிழந்த அசோகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அசோகன் மதுபோதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் அவரைத் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:டெல்லியில் ஏமாற்றம்... பணமின்றி 1,200 கிமீ தண்டவாளத்தில் நடந்த முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details