காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி, பணியின்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், கடந்த 20ஆம் தேதி முதல் ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.
இந்நிலையில், தொற்றின் தீவிரத்தால் சிகிச்சைப் பலனின்றி சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி உயிரிழந்தார். உயிரிழந்த பழனியின் உடல் காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளக்கரை இடுகாட்டில் தகனம் செய்ய கொண்டுவரப்பட்டது.