காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் குட்டி. இவருடைய மகள் பிருத்திக்கா அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் பிருத்திக்கா கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு - ஒரு வார காலமாக காய்ச்சலால் மாணவி அவதி
காஞ்சிபுரம்: மாங்காடு அருகே 9 ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவரது பெற்றோர் அருகே உள்ள தனியார் மருத்துவமதனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் காய்ச்சல் தீவிரமானதையடுத்து நேற்று சிகிச்சைகாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பல்லி விழுந்த குளிர்பானத்தை அருந்திய சிறுமிக்கு தீவிர சிகிச்சை