தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து வயதினருக்கும் இலவச தடுப்பூசி: மத்திய அரசை எதிராகப் போராடத் தயாராகும் காங்.,! - Corona free vaccination

காஞ்சிபுரம்: அனைத்து வயதினருக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் அளவூர் நாகராஜன் தலைமையில் கட்சியினர் ஆட்சியரைச் சந்தித்து இது குறித்து மனு அளித்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : Jun 5, 2021, 6:20 AM IST

மூன்றாவது அலை வர இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரத முன்னாள்பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் ஏற்கனவே மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.

எனவே அனைத்து வயதினருக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் அளவூர் நாகராஜன் தலைமையில் கட்சியினர் நேற்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை நேரில் சந்தித்து இது குறித்து அவரிடம் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details