தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: கிராமமக்கள் சாலை மறியல்! - அரசுக்கு சொந்தமான நிலத்தில் தனிநபர் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அரசுக்குச் சொந்தமான நிலத்தில் தனிநபர் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

road strike at chengalpattu
road strike at chengalpattu

By

Published : Jan 20, 2020, 6:01 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழம்புத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரிக்கரை நிலத்தை தனிநபர் ஒருவர், அவரது பட்டா நிலத்திற்கு செல்ல நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பாதை அமைக்க முற்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் சம்பந்தபட்ட அனைத்து அரசு அலுவலகர்களிடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 50க்கும் மேற்பட்டோர் புக்கத்துறை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

கிராமமக்கள் சாலை மறியல்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இதுகுறித்து அலுவலர்களிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதையும் படிங்க: சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு...

ABOUT THE AUTHOR

...view details