தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 18, 2020, 10:39 PM IST

Updated : Dec 18, 2020, 10:45 PM IST

ETV Bharat / state

மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நாவலூர் குடியிருப்பு பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு வருகை தந்த ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமினை அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

minister benjamin
மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நாவலூர் குடியிருப்பு பகுதியில், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் திறந்துவைத்தார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் திடீரென அமைச்சர் பெஞ்சமினை முற்றுகையிட்டு குடிநீர் வசதி, சாலை வசதி, பேருந்து போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தாங்கள் அவதிப்படுவதாகவும், பலமுறை அரசு நிர்வாகத்திடமும் சட்டப்பேரவை உறுப்பினரிடமும் பலமுறை மனு அளித்து எந்தப் பயனும் இல்லை எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் பெஞ்சமினை முற்றுகையிட்ட பெண்கள்

இதைத்தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள், நான் அவரிடம் பெற்றுக்கொண்டு உங்கள் குறைகளை சரிசெய்து தருகிறேன் என அமைச்சர் பெஞ்சமின் உறுதியளித்தார். மினி கிளினிக்கை திறந்து வைக்க வந்த அமைச்சரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத கோயில் மற்றும் சுற்றுலா நகரங்கள்

Last Updated : Dec 18, 2020, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details