தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் வேளாங்கண்ணி ஆலையத்தில் கொடியேற்றம்! - sriperumbudur velankanni annual festivel

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

sriperumbudur velankanni annual festivel

By

Published : Aug 30, 2019, 6:57 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரசித்திப் பெற்ற புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில், 11ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

இதை முன்னிட்டு, 12 அடி நீளமுள்ள அன்னையின் திருவுருவம் தாங்கிய திருக்கொடியானது நேற்று மாலை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட குருக்கள் ஜான் போஸ்கோ பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடி ஏற்றினார்.

செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை சிறப்பாக இத்திருவிழா கொண்டாடப்படவுள்ளது. அதனால் செப்டம்பர் 7ஆம் தேதி மாலை கூட்டுத் திருப்பலியும், அதைத் தொடர்ந்து புனித வேளாங்கண்ணி அன்னையின் ஆடம்பரத் தேர்பவனியும் நடைபெற உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் வேளாங்கண்ணி ஆலையத்தில் கொடியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details