தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மீது பைக் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு! - 40 அடி நீளமுள்ள டெய்லர் லாரிமீது பைக் மோதி விபத்து

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை ஓரத்தில் நின்ற லாரி மீது, இருசக்கரவாகனம் மோதியதில், தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

விபத்து
விபத்து

By

Published : Apr 12, 2021, 1:02 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (37). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது பணியை முடித்துவிட்டு நேற்றிரவு (ஏப்ரல் 11) இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வடகல் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த நாற்பது அடி நீளமுள்ள லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. தலையில் பலத்த காயம் அடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாகன விபத்தில் உயிரிழந்தவர்
தகவலறிந்து சென்ற ஒரகடம் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் சாலையின் ஓரமாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், எனவே சாலையில் வாகனத்தை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:செல்ஃபி எடுக்கும்போது தடுமாறி கூவத்தில் விழுந்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details