காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாங்கான்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் வயது 30. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை8) சங்கர் பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நாவலூர் பகுதியில் வெங்காட்டு சாலையில் ஓரியண்டல் லோட்டஸ் உணவகம் சப்ளைஸ் (பி) லிமிடெட் அருகில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கண்டைனர் லாரியின் மீது மோதியதில் தலையிலும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.