தமிநாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று (மார்ச்.10) மாலை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. இதில் ஸ்ரீபெரும்புத்தூர் தனித் தொகுதியாகும். இத்தனித் தொகுதியில் தற்போது அதிமுக சட்டப்பேரவை உருப்பினராக உள்ள மதனந்தபுரம் கே. பழனிகக்கு இரண்டாவது முறையாக வேட்பாளராகக் களமிறங்க தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுயில் போட்டியிட அதிமுக எம்.எல்.ஏவிற்கே மீண்டும் வாய்ப்பு - அதிமுகவினர் கொண்டாட்டம் இந்நிலையில், இதனை வரவேற்கும் விதமாக அதிமுக மாவட்ட துணைச் செயலர் போந்தூர் செந்தில் ராஜன் தலைமையில், ஏராளமான அதிமுகவினர், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆனை கட்டிப் போரடிக்கும் சங்க காலக் காட்சியை மீண்டும் உயிர்ப்பித்த மதுரை மைந்தர்: வைரல் வீடியோ