காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜர் உற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ராமானுஜரின், 1002ம் ஆண்டு திரு அவதார உற்சவ விழா 18ஆம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில், ராமானுஜர் திருவீதி உலா கொண்டு செல்லப்பட்டார்.
களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்! - throttam
காஞ்சிபுரம்: ஸ்ரீராமானுஜரின் 1002ம் ஆண்டு திருஅவதார திருவிழாவையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
![களைகட்டிய ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3226633-thumbnail-3x2-ig.jpg)
களைகட்டிய ஸ்ரீபெரும்புதுார் தேரோட்டம்
இதைத்தொடர்ந்து விழாவின் ஒன்பதாவது நாளான இன்று திருத்தேர் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகளான தேரடிச் சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கைஆழ்வார் சாலை வழியாக தேர் பவனி சென்று தேர் நிலையத்தை அடைந்தது.
ஸ்ரீபெரும்புதூர் தேரோட்டம்