காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள பிரணவ மலையில் காலசக்கர யாகம் நடைபெற்றது. இந்த யாகமானது நாடும் நாட்டு மக்களும் நலம் பெற, வானம் மும்மாரிப் பொழிய, வறண்ட பூமி செழிக்க, வறுமை ஒழிய, நல்ல தலைமை ஏற்பட, மனிதர்களின் ஆயுட் காலம் அதிகரிக்க, ஆரோக்கியத்துடன் வாழ நடைபெற்றது.
நாடு வளம்பெற சிறப்பு காலசக்கர யாக பூஜை! - Special Yaga Pooja
காஞ்சிபுரம்: நாடு வளம்பெற, திருப்போரூரில் அமைந்துள்ள பிரணவ மலையில் 19 சித்தர்கள் சிறப்பு காலசக்கர யாகம் நடத்தினர்.
Pooja
சுற்றிலும் 19 அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டு 19 சித்தர்களால் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு உள்ள குறைகளைப் போக்க ஒவ்வொரு அக்னி குண்டத்திலும் அரிசி, பொறி, விறகு குச்சிகளை போட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏரளாமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.