காஞ்சிபுரம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார்குளம் பகுதியைச்சேர்ந்தவர், பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராகப் பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரம், என்பவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல் துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும், கூறப்படுகிறது. மேலும் காவலர் சோமு வீட்டிற்குச்சென்று பிரியா அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் காவலராக இருந்து வந்த சோமசுந்தரத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து காவல்துறை உயர் அலுவலர்கள் கவனத்திற்கு வந்ததால் அவரை, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.
மேலும் பிரியா அடிக்கடி சோமசுந்தரத்திடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், சோமசுந்தரம் அந்தப்பெண்ணின் உறவினரிடம், பிரியாவை பற்றி கூறியதாகத் தெரிகிறது. இதனால் பிரியா சோமசுந்தரத்தின் மீது தொடர்ந்து கோபத்தில் இருந்து வந்துள்ளார்.