தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பெயரில் திட்டங்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

வரும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் அண்ணாவின் பெயரில் மக்களுக்காகப் பல நல்ல திட்டங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Jun 30, 2021, 1:23 PM IST

காஞ்சிபுரம்:முதலமைச்சராகப் பதவியேற்றபின் முதல்முறையாக மு.க. ஸ்டாலின், திமுக நிறுவனரான அண்ணாவின் நினைவு இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார்.

அண்ணா வகுத்த பாதையில் ஸ்டாலின்

தொடர்ந்து, அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நினைவு இல்லத்திலுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்த குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதினார்.

அண்ணாவுக்கு மரியாதை

அதில், அண்ணாவின் அறிவுரைப்படி, திமுக ஆட்சி பீடுநடை போடும் என உறுதிபட குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

அண்ணா பெயரில் திட்டங்கள்

செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அண்ணா, எங்களுக்கு அரசியல் ஆசானாக விளங்கினார். அவரின் வழிப்படி நடப்போம். வருகின்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் அண்ணாவின் பெயரில் இன்னும் பல நல்ல திட்டங்கள் மக்களுக்கு கொடுக்கப்படும்" என்றார்.

முதலமைச்சர் எழுதிய குறிப்பு

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான உடனிருந்தனர்.

காஞ்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்

இதையும் படிங்க:'அண்ணா வழியில் பீடு நடைபோடும் ஆட்சி' - காஞ்சி இல்லத்தில் சூளுரைத்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details