தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு 'காவலன் செயலி' விழிப்புணர்வு! - மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு காவலன் செயலி விழிப்புணர்வு

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் காவலன் செயலி குறித்து மருத்துவம் பயிலும் மாணவிகளுக்கு காவல்துறையினர் விளக்கினர்.

sos app
sos app

By

Published : Dec 19, 2019, 9:47 AM IST

தமிழ்நாட்டில் குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவிகள், பெண்களிடம் ஆபத்து நேரத்தில் உதவுவதற்காக காவலன் எஸ்.ஓ.எஸ்., என்ற செயலி காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டது. இருப்பினும் அது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் உடனடியாக விழிப்புணர்வு ஏற்படவில்லை.

இதனைத்தொடர்ந்து, காவலன் செயலி குறித்தும், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் மாணவிகளுக்கு இதன் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு 'காவலன் செயலி' விழிப்புணர்வு

இந்த செயலின் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்களை உடனடியாக பாதுகாக்க இந்த செயலி மிகவும் உறுதுணையாக இருக்கும் என மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் ஐபிஎஸ் காவலன் செயலி குறித்து பேசினார்.

இந்நிகழ்வில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இயக்குனர் பாலாஜி மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் அனிதா, மாணவ-மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பொறுப்பில்லாத ஆசிரியர், நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details