காஞ்சிபுரம்: 2018 முதல் 2020ஆம் ஆண்டுவரை நிலுவையிலிருந்த திருமண உதவித் திட்டம் மூலம் (தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்), 78 லட்சம் ரூபாயில் நிதியுதவியும், 1 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டு கிராம் தங்க நாணயங்களும் வழங்குவது போன்ற திட்டங்கள் நிலுவையிலுள்ளதால், உடனடியாக வழங்கக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிமுக ஆட்சியை விமர்சித்த கீதா ஜீவன்:
இதையடுத்து, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ், 300 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், 52 பயனாளிகளுக்கு இலவச மின்மோட்டார் வசதியுடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
30 திருநங்கைகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு 52 மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வீதம் முதற்கட்டமாக 15 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நலத்திட்டங்கள் நல்கிய அமைச்சர் கீதா ஜீவன் பின்னர் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், 'அதிமுக ஆட்சியில் 2018 - 2019, 2019 - 2020ஆம் ஆண்டுகளில் திருமண உதவித்தொகைக்காகப் பதியப்பட்ட 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
மேலும், இனிவரும் காலங்களில் திருமணம் முடிந்த பெண்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவி ஆகியவை உடனடியாக வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வாள்வீச்சு வீராங்கனைக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர்