தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் போலீஸ் காவல் - police custody

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் போலீஸ் காவல் வழங்கி செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் போலீஸ் காவல்
சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் போலீஸ் காவல்

By

Published : Aug 2, 2021, 4:37 PM IST

செங்கல்பட்டு:கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவலர்கள் அவர் மீது இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்து கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் போலீஸ் காவல்

இந்த நிலையில் சிவசங்கர் பாபா மூன்றாவதாக ஒரு போக்சோ வழக்கில் இன்று (ஆகஸ்ட் 2) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிற்கும் சேர்த்து (ஆகஸ்ட் 1) ஆம் தேதி வரை அவரை போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி காவலர்கள் விசாரிக்க செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:3ஆவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

ABOUT THE AUTHOR

...view details