தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் அருகே ரூ.4.90 லட்சம் மதிப்புள்ள பட்டு புடவைகள் பறிமுதல்! - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.90 லட்சம் மதிப்பிலான 56 பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பட்டு புடவைகள்
பட்டு புடவைகள்

By

Published : Mar 17, 2021, 9:38 AM IST

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் அசினாபேட்டை பகுதிகளிலிருந்து காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் கடைகளில் விற்பனைக்காக, இரண்டு கார்களில் எடுத்துவரப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்தப் பட்டுப் புடவைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. அந்த வகையில் ஒரு காரில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் 14 பட்டு புடவைகளும் மற்றொரு காரில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் 42 பட்டு புடவைகளும் என மொத்தம் ரூ.4.90 லட்சம் மதிப்பிலான 56 பட்டு புடவைகள் இருந்தன.
இவற்றைதேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததோடு, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ ராஜலட்சுமி முன்னிலையில் கணக்கீடு செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details