காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குள்பட்ட 44ஆவது வார்டு சேஷாத்ரிபாளையம் தெரு விரிவாக்கம் பொன்மகள் அவின்யூ பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்தக் குடியிருப்புப் பகுதியின் அருகிலேயே மஞ்சள் நீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாயின் கரை ஓரத்தில் கைக்குழந்தைகள், முதியவர்கள், ஏழை எளிய மக்கள் வசித்துவருகின்றனர்.
இதனால், சேஷாத்திரிபாளையம் தெரு பகுதியில் அவ்வப்போது பாதாளச் சாக்கடையில் கழிவுநீர் வெளியேறி பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்நிலையில், நகராட்சி ஊழியர்கள் விதிகளுக்கு முரணான வகையில், சாலைப் பகுதியில் பைப்லைன் அமைத்து மஞ்சள் நீர் கால்வாயில், பாதாள சாக்கடை கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.