காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட வைகுண்டபுரம் தெருவில் சில மாதத்திற்கும் மேலாகக் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி..! - மக்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம்: குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பொறுப்பு ஆணையர் வீட்டு அருகே 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்காத பொறுப்பு ஆணையர் வீடு அருகே 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த சிவகாஞ்சி காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.