காஞ்சிபுரம்: நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்த்து வைத்து வழக்காடிகள் பயன்பெற தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.
அதன்படி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை இன்று, ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட வழக்குகளில் வழக்காடிகளுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன. அதன்படி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பிரச்சனை உள்ளிட்டவை தீர்த்து வைக்கப்பட்டதாக மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிம்பு மருத்துவமனையில் அனுமதி; சோகத்தில் ரசிகர்கள்