காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டு தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் தொடக்கவிழா செங்கல்பட்டில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய மாவட்டத்தை முறைப்படி தொடக்கி வைத்த முதலமைச்சர், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். புதிதாக அமையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் என ஆறு சட்டமன்றத் தொகுதிகளும், தாம்பரம் செங்கல்பட்டு மதுராந்தகம் என மூன்று வருவாய் கோட்டங்களும் உள்ளன.