தமிழ்நாடு

tamil nadu

3 டன் அரிசி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

காஞ்சிபுரம்: உரிய ஆவணமின்றி மினி லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 3 டன் எடையுள்ள 150 மூட்டை அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

By

Published : Mar 14, 2021, 6:12 AM IST

Published : Mar 14, 2021, 6:12 AM IST

உரிய ஆவணமின்றி கொண்டுச்செல்லப்பட்ட 3 டன் எடையுள்ள 150 மூட்டை அரிசி
உரிய ஆவணமின்றி கொண்டுச்செல்லப்பட்ட 3 டன் எடையுள்ள 150 மூட்டை அரிசி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்களை விநியோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படைக் குழு, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்பாளர்கள் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் நேற்று (மார்ச் 13) தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து ஆரணிக்கு நோக்கிச் செல்வதற்காக மினி லாரி சென்றது.

அந்த மினி லாரியை அலுவலர்கள் சோதனை செய்தபோது, மினி லாரியில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்ததையடுத்து அதற்கான ஆவணத்தை காட்டும்படி ஓட்டுநரிடம் அலுவர்கள் கேட்டபோது, அதற்கான ஆவணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 மூட்டைகளில் இருந்த மூன்று டன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல்செய்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details