ஸ்ரீபெரும்புதூரில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் - Kanchipuram district news
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.2700 மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் செயல்பட்டுவரும் பெரும்பாலான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் தரமற்ற பொருள்கள் விற்பனை செய்துவருவதாகப் புகார் எழுந்தது.
அதனடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான அலுவலர்கள் குழு பல்பொருள் அங்காடி, பிரபல சூப்பர் மார்க்கெட், தின்பண்டங்கள் தயார்செய்யும் கடை உள்ளிட்டவற்றில் அதிரடியாக ஆய்வுமேற்கொண்டனர்.
அதில் இரண்டு தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் குழந்தைகள் விரும்பி உண்ணும் 600 பிஸ்கட் பொட்டலங்கள் காலாவதியான நிலையிலும், குளிர்பானங்கள், சாக்லேட்டுகளில் உற்பத்திசெய்யப்பட்ட தேதி குறிப்பிடாமலும் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து 2ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர்களை எச்சரித்த அலுவலர்கள் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
TAGGED:
Kanchipuram district news