தமிழ்நாடு

tamil nadu

'திட்டங்கள் அறிவிப்பார்.. ஆனால் செயல்படுத்த மாட்டார்' - மு.க.ஸ்டாலின் மீது சீமான் குற்றச்சாட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை மட்டுமே அறிவிப்பதாகவும், ஆனால் செயல்படுத்துவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By

Published : Feb 14, 2022, 7:07 PM IST

Published : Feb 14, 2022, 7:07 PM IST

சீமான் பேட்டி
சீமான் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (பிப்.14) சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று வேட்பாளர்கள், கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு ஆலோசனைகளை வழங்கி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "ஒரே நாடு, ஒரே தேர்தல் என கொண்டு வருவதற்கு முன் ஒரே சுடுகாடு, ஒரே குளம் என கொண்டு வரவேண்டும். இந்திய அரசைக் குடியரசுத் தலைவர் ஆய்வு மேற்கொண்டால் அனுமதிப்பார்களா? அரசு சரியாகத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்கிறதா என ஆளுநர் மேற்பார்வை செய்யலாம்.

நாட்டுக்கு ஏன் ஆளுநர்?

அண்ணா கூறியதை போல ஆட்டுக்கு ஏன் தாடி, நாட்டுக்கு ஏன் ஆளுநர். நாமென்ன வீட்டுப் பாடமா எழுதித் தருகிறோம், அவர் திருத்தி நமக்கு மார்க் போடுவதற்கு. ஆளுநரின் வேலை ஒற்றர் வேலை.

சீமான் பேட்டி

மிரட்டப்படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். அதிமுக, பாமக விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான். 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப்பட்டுள்ளனர். சில இடங்களில் வேட்பாளர்களை மூன்று, நான்கு நாள்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இளம் வயது வேட்பாளர்களைக் கடத்தி இருக்கிறார்கள். சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. இது கொடுங்கோன்மை. இப்படி செய்வதற்கு தேர்தலை வேண்டாம் நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டுப் போய்விடலாம். தேர்தல் என்றால் முறைப்படி நடக்க வேண்டும், பேரம் பேசாமல் அச்சுறுத்தல் இல்லாமல் நடைபெற வேண்டும்.

தனிப்பெரும்பான்மை

பாஜகவை விட அதிக வாக்கு வங்கிகளை நாம் தமிழர் கட்சி வைத்துள்ளது. நாங்கள்தான் எதிர்க்கட்சி, ஆனால் 2 விழுக்காடு வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறி வருகிறார். நீட், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை முதன்முதலில் கொண்டுவந்தது காங்கிரஸ் தான், அது உலகத்திற்கே தெரியும். காங்கிரஸ் கொண்டுவந்ததை பாஜக தொடர்கிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியிலிருந்தபோது இதை செயல்படுத்த முடியவில்லை. இப்போது பாஜக தனிப் பெரும்பான்மையாக இருப்பதால் அதை செயல்படுத்தி வருகிறார்கள். தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே மேயர் உள்ளிட்ட பதவிகளைப் பெறுவோம்" என்றார்.

குனிந்து கும்பிட்ட காட்சி

மானம் இல்லாமல் வேலை செய்ய வேண்டுமென திமுக நிர்வாகிகள் தொடர்ந்து பேசி, வருவது குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், "தன்மானத்திற்கு என்று இயக்கம் கண்டவன் தமிழன், ஆனால் தமிழன் தான் அவமான சின்னமாக உலகம் முழுவதும் அலைகிறான். அதற்குக் காரணம் திமுக கால்களில் விழ வேண்டும். உதயநிதி என்பவர் சாதாரண சட்டப்பேரவை உறுப்பினர். ஆனால் அனுபவம் மிகுந்த கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவையில் அவரைப் பார்த்து குனிந்து கும்பிட்ட காட்சிகள் எல்லாம் இருக்கிறது. இதுவா சுயமரியாதைச் சுடர்.

அறிவிப்பு மட்டுமே

முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்களை அறிவிப்பு மட்டுமே செய்து வருகிறார். அதனை செயல்படுத்துவதில்லை. தேர்தல் நேரத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்று கூறியது வெறும் வெற்று திட்டங்களாக உள்ளது. இங்கு எதுவும் நிலை அல்ல, ஜெயலலிதாவை நிரந்தர முதலமைச்சர் என சுவர் விளம்பரங்களில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது எங்கே?. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. ஒரு விழுக்காடு வாக்கு வங்கியில் ஆரம்பித்த வளர்ச்சி தற்போது 7 விழுக்காடு வாக்கு வங்கியில் வந்து நிற்கிறது. திராவிட கட்சிகளின் சின்னத்தை மறந்து எங்களுடைய விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்பதே வெற்றிதான்" என கூறினார்.

இதையும் படிங்க:மக்களே உஷார்... ரேசன் அட்டைக்கு ரூ.1000 போலி விண்ணப்பம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details