தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட உணவகத்திற்கு சீல்! - Sealed to restaurant

காஞ்சிபுரம்: ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் திறக்கப்பட்ட உணவகத்திற்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார்.

சீல் வைக்கப்பட்ட சரவணா பாலா உணவகம்
சீல் வைக்கப்பட்ட சரவணா பாலா உணவகம்

By

Published : Mar 28, 2020, 5:42 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில், ஊரடங்கு உத்தரவில் மருந்தகங்கள், பால் கடை, காய்கறி சந்தை, மளிகை கடை, உணவகங்கள் உள்ளிட்டவைகளில் சமூக இடைவெளியை பின்பற்றியும், பொதுமக்கள் அதிக அளவில் கூடக் கூடாது என உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரத்தில் இயங்கும் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டுமெனவும், அமர்ந்து சாப்பிடக்கூடாது என்ற விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பல முறை நடைபெற்ற கூட்டங்களில் ஆட்சியர் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட உணவகத்திற்கு சீல்

இந்நிலையில், ரங்கசாமி குளம் பகுதியில் இயங்கி வந்த சரவணா பாலா உணவகத்தில் பொதுமக்கள் அமர்ந்து உணவு அருந்தியபோது, அவ்வழியாக ஆய்வுக்குச் சென்ற ஆட்சியர் பா.பொன்னையா பார்த்து கோபமடைந்தார். பின்னர், உடனடியாக உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் கூடும் வகையில் செயல்பட்டதால், அந்த உணவகத்திற்கு சீல் வைக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் வட்டாட்சியர் பவானி தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் உணவகத்தை மூடி சீல் வைத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கிருமி நாசினி தெளிப்பு!

ABOUT THE AUTHOR

...view details