காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை பெய்துவருகிறது. இந்த வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடர் மழை பொழிவால் மழைநீர் வெளியேற முடியாமல் பல்வேறு பகுதிகளில் சாலைகள், வீடுகள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளமாகத் தேங்கியுள்ளது.
இதனால் மாணவர்களின் நலன்கருதி அம்மாவட்ட நிர்வாகம் மழைநீர் தேங்கி நிற்கும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அரசு மேல்நிலைப் பள்ளி, அவளூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
மேலும் தம்மனூர், பெரும்பாக்கம், வில்லிவலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் என ஏழு அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காரைக்காலில் கடல் சீற்றம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்