காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தேரடித் தெருவில் வசித்து வருபவர் கோகுலகிருஷ்ணனின் மகன் ரித்தீஷ் குமார் (15). இச்சிறுவன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தாந்தோணி அம்மன் கோயில் குளத்தில் வாலிபர்கள் குளித்து கொண்டிருப்பதைக் கண்டு தானும் குளிப்பதாகக் கூறி சிறுவன் குளத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ரித்தீஷ் குமார் உள்ளே மூழ்கியுள்ளான். அதைக் கண்டு பதட்டமடைந்த இளைஞர்கள், சிறுவனை தூக்கி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து ரித்தீஷ் குமார் கண் விழிக்காத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ரித்தீஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.