அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தார் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா.
இதைத் தொடர்ந்து அவர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார்.
அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தார் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா.
இதைத் தொடர்ந்து அவர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம்செய்தார்.
பின்னர் மகா பெரியவரின் தங்க ரத தேரினை அவர் வடம்பிடித்து இழுத்தார். மேலும் கட்சிப் பிரமுகரின் மகன் ராஜா மீராவின் இரண்டு மாத ஆண் குழந்தைக்கு ஜெயஹர் எனவும் பெயர் சூட்டினார். முன்னதாக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து சகிகலா வழிபட்டார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!