தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா விடுதலை - அமமுகவினர் கொண்டாட்டம் - அமமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்

காஞ்சிபுரம்: சசிகலா விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அமமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சசிகலா விடுதலை அமமுகவினர் கொண்டாட்டம்
சசிகலா விடுதலை அமமுகவினர் கொண்டாட்டம்

By

Published : Jan 27, 2021, 2:23 PM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா, இன்று
(ஜனவரி 27) தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டார்.

இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோலாகலமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காஞ்சிபுரம் நகர செயலாளர் மனோகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அமமுகவினர் காஞ்சிபுரம் பெரு நகராட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலா விடுதலை - அமமுகவினர் கொண்டாட்டம்

அதைத் தொடர்ந்து, காந்தி ரோடு தேரடி பகுதியிலும் அமமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கோலாகலமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:சசிகலா விடுதலையால் பெரும் மகிழ்ச்சி! - டிடிவி.தினகரன்

ABOUT THE AUTHOR

...view details