தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா! - Kanchipuram Sri Kamatsiyamman Temple

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் இன்று (ஏப். 3) வி.கே. சசிகலா சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட சசிகலா
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட சசிகலா

By

Published : Apr 3, 2021, 9:03 PM IST

Updated : Apr 3, 2021, 9:29 PM IST

அண்மையில் அரசியலில் இருந்து விடைபெற்ற சசிகலா, தன் கணவரின் குலதெய்வக் கோயில் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் உலக பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் இன்று (ஏப். 3) வி.கே. சசிகலா சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சசிகலா

அதையொட்டி கோயிலின் நுழைவு வாயிலில் அமமுக வேட்பாளர்கள் ஆர்.வி. ரஞ்சித்குமார், என். மனோகரன் ஆகியோர் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும், அமமுக தொண்டர்கள் பலரும் திரண்டுவந்து சசிகலாவை வரவேற்றனர்.

இதனையடுத்து, காமாட்சியம்மன் கோயிலில் வி.கே. சசிகலா சாமி தரிசனம் செய்தார். பின்னர் சங்கர மடத்திற்குச் சென்று மகாபெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தை வணங்கினார்.

இதனையடுத்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று, அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படிங்க: 'மதுரை மீனாட்சி கோயிலுக்கு சசிகலா திடீர் விசிட்'

Last Updated : Apr 3, 2021, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details